ஊத்துக்கோட்டையில் இருந்து செங்குன்றம் வரை கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்; மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து பனிமனையில் இருந்து  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலமான புத்தூர், திருப்பதி, காளஹஸ்தி, நகரி என 36 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள்  ஊத்துக்கோட்டை  பஸ் நிலையத்திற்கு வருவார்கள். அங்கிருந்துதான், தாங்கள் பணிபுரியும் இடங்களான  கோயம்பேடு, செங்குன்றம், பாரிமுனை  போன்ற  பல்வேறு பகுதிகளுக்கு  பஸ் பிடித்து இங்கிருந்து வேலைக்கு  செல்வது வழக்கம். இதில், பள்ளி நேரம் மற்றும்  பள்ளி விட்டு வீடு திரும்பும் போதும்  பெரியபாளையம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய  பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், ஊத்துக்கோட்டையில் இருந்து  மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்லும் நேரத்திலும், வீடு திரும்பும் நேரத்திலும்  கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்களை, ஊத்துக்கோட்டையில் இருந்து செங்குன்றம் வரை இயக்க வேண்டும் என மாணவர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதில் குறிப்பாக  நேற்று காலை பெரியபாளையத்தில் வாலிபால் போட்டி நேற்று நடைபெற இருந்தது. எனவே, அப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பஸ் படிகட்டிலும்,  பஸ்சின் மேற்கூரையை, பிடித்த படி ஆபத்தான பயணம் செய்தனர். இதை பார்த்த பொதுமக்களில் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.  உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காகவாவது கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: