முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கூடுதல் ஐ.ஜி. சீனிவாசன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

சென்னை: முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கூடுதல் ஐ.ஜி. சீனிவாசன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. உட்ச்சநீதிமன்ற குழுவால் முடக்கப்பட்ட பி.ஏ.சி.எல் சொத்துகளை முறைகேடாக விற்க உதவிய புகாரில் கடந்த வாரம் சீனிவாசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பத்திரப்பதிவு துறையின் கூடுதல் ஐ.ஜி. கடந்த சில நாட்களுக்கு முன்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் இவர் சட்டவிரோதமாக பல்வேறு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களுடன் சேர்ந்து விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக கடந்த 2011-12 ஆண்டில்  பி.ஏ.சி.எல் என்ற நிறுவனம் இந்தியா முழுவதும் நிலங்கள் மீது பணம் வசூல் செய்து அவர்களுக்கு ரியல் எஸ்டேட், விவசாய நிலங்கள் வழங்குவதாக சுமார் 6 கோடி முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து, மோசடி செய்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது.

அப்போது, இந்த மோசடியில் சுமார்ரூ.50 ஆயிரம் கோடி அளவிலான நிலமானது அந்த நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, மோசடிக்கு உட்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து அந்த நிலங்கள் அனைத்தையும் விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு பிறப்பித்தது.

அதே நேரத்தில் சிபிஐ-யும் இது தொடர்பாக 2016-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த நடவடிக்கை  என்பது இருதரப்பில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நாடு முழுவதும் மாநில அரசுகளுக்கு இந்த நிறுவனம் தொடர்பான நிலங்களை விற்பனை செய்ய கூடாது என கடிதம் அனுப்பியது

அதன் அடிப்படையில், தமிழக தலைமை செயலாளருக்கும், வருவாய் துறை செயலாளருக்கு இந்த  கடிதம் அனுப்பபட்டிருந்தது. ஆனால் இந்த கடிதங்களையும், உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, பத்திரப்பதிவு துறையின் கூடுதல் ஐ.ஜி.-யாக இருந்த கே.வி.சீனிவாசன் என்பவர் தமிழகத்தில் பி.ஏ.சி.எல் நிறுவனம் தொடர்பான 609 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டதை அடுத்து பத்திரப்பதிவு துறையின் கூடுதல் ஐ.ஜி. கே.வி.சீனிவாசன் மீது லஞ்சஒழிப்புத்த்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: