2024ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கம் பெற பகுப்பாய்வு மென்பொருள்: சென்னை ஐஐடி உருவாக்கம்

சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம், என பல பதிப்புகளைக் கொண்ட ‘ஸ்மார்ட் பாக்சர்’ என்ற பகுப்பாய்வு மென்பொருளை சென்னை ஐஐடி மற்றும் இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ்  இணைந்து உருவாக்கி உள்ளது. விளையாட்டு வீரர்கள் அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் வீடியோ கேமராக்களை பயன்படுத்தி இண்டர்நெட்-ஆப்-திங்ஸ் மூலம் பின்னூட்டம் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை இந்த பகுப்பாய்வு தளம் வழங்கும். 2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கில் குறிப்பிட்ட சில முக்கிய விளையாட்டுகளை இந்திய அரசு பட்டியலிட்டு, அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனை குறிக்கோளாகக் கொண்டுதான் ‘ஸ்மார்ட்பாக்சர்’ மென்பொருளை ஐஐடி மெட்ராஸ் மேம்படுத்தி வருகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: