மாஸ்டர் பிளான் மூலம் அனைத்து முதுநிலை கோயில்களும் மேம்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: மாஸ்டர் பிளான் மூலம் அனைத்து முதுநிலை கோயில்களும் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்துள்ளார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட கோயில்களின் செயல் அலுவலர்களுடன் கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குபின் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: சென்னை மண்டலம் 1 மற்றும் 2 இணை ஆணையாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 1,216 கோயில்களில் 108 முதுநிலை கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் இதுவரை சுமார் 160 கோடி ரூபாய் அளவிற்கு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாஸ்டர் பிளான் மூலம் அனைத்து முதுநிலை கோயில்களும் மேம்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் பொறியார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: