விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை ‘கிடுகிடு’

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விநாயக சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் வழக்கமாக முகூர்த்த மற்றும் பண்டிகை நாட்களை முன்னிட்டு, பூக்களின் விலை பல மடங்கு அதிகரிக்கும். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு கிலோ மல்லி ரூ.600 க்கும், கனகாம்பரம் ரூ.900க்கும், முல்லை ரூ.450க்கும், ஜாதி மல்லி ரூ.300க்கும், சம்பங்கி ரூ.240க்கும் அரளி பூ ரூ.250க்கும், சாமந்தி ரூ.160க்கும், பன்னீர் ரோஸ் ரூ.80க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து, பூ வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தினசரி 30 முதல் 35 வாகனங்களில், மல்லி,  சாமந்தி என பல்வேறு பூக்கள் வரும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூடுதலாக 50 வாகனங்களில் பூக்கள் வந்து குவிந்துள்ளன. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும், விலை இன்னும் ஒரு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் விற்பனை அதிகரித்துள்ளது’’ என்றார்.

Related Stories: