சென்னை கீழ்பாக்கம் முத்துமாரி கெங்கையம்மன் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா; அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

சென்னை: சென்னை, கீழ்பாக்கம் கார்டன், அருள்மிகு முத்துமாரி கெங்கையம்மன் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். சென்னை, கீழ்பாக்கம் கார்டன், அருள்மிகு முத்துமாரி கெங்கையம்மன் திருக்கோயிலில் இன்று (29.08.2022) நடைபெற்ற குடமுழுக்கு பெருவிழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்கள் புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்ததுதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை, கீழ்பாக்கம் கார்டன், அருள்மிகு முத்துமாரி கெங்கையம்மன் திருக்கோயிலில் இன்று (29.08.2022) காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி வேதபாராயணம், மஹாயக்ஞம், பூர்ணாஹுதிக்குப் பின் திருக்கலசங்கள் புறப்பட்டு விமான கோபுர பூஜையுடன் இராஜகோபுரம், விமானம், பரிவார மூர்த்திகளுக்கும், அருள்மிகு முத்துமாரி கெங்கையம்மனுக்கும் குடமுழுக்குப் பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தீபாராதனை முடிவுற்று பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. இக்குடமுழுக்கு பெருவிழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். கே. மோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., இணை ஆணையர் முனைவர் ந. தனபால், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்களும், பக்தகோடிகளும் குடமுழுக்கு பெருவிழாவில் கலந்து கொண்டு அருள்மிகு முத்துமாரி கெங்கையம்மன் அருள் பெற்றனர்.

Related Stories: