சென்னை மாவட்டத்தில் திமுக பகுதி நிர்வாகிகள் தேர்தல் : பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் மாவட்டத்திற்கான திமுக பகுதி நிர்வாகிகள் தேர்தலுக்கு வரும் 30ம் தேதி மனுதாக்கல் நடைபெறும் என்று பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு ஆகிய மாவட்டங்­களில் உள்ள பகுதி அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள் மூவர் (கட்டாயமாக ஒருவர் பொது தொகுதியனராகவும், ஒருவர் ஆதிதிராவிடராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்) ஆகிய அலுவலளர்களையும், பகுதி கழகத்திற்கு உட்பட்ட வட்டங்­களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்ட பிரதிநிதிகளையும், இரண்டு மாவட்ட பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுப்­பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே அதற்குரிய வேட்பு மனுக்­கள் மாவட்ட கழகத்திலோ அல்லது தலைமை  கழக பிரதிநிதியிடமோ பெற்று, முறைப்படி வேட்பு மனுவினை பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணத்துடன் 30ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக, அந்தந்த மாவட்டங்களுக்கென அறிவிக்கப்­பட்டுள்ள தலைமை கழக பிரதிநிதியிடம் தாக்­கல் செய்து ரசீது பெற்று கொள்ள வேண்டும். அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்­கள் மூன்று பேர், பகுதிக் கழகத்திற்குட்பட்ட வட்டங்களின்  எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்ட பிரதிநிதிகள் மேலும் 2 மாவட்ட பிரதிநிதிககள் பொறுப்பு ஒன்றுக்கு ஒவ்வொரு வேட்புமனு கட்டணம் ரூ.1000. வேட்புமனு விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு ரூ.25 கட்டணம் செலுத்தி மாவட்டக் கழகத்திலோ அல்லது தலைமை கழக பிரதிநிதியிடமோ பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு தாக்­கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை, தலைமை கழக பிரதிநிதிகள் சரிபார்த்து, வேட்பு மனுவை பரிசீலனை செய்து, போட்டியிருக்கும் பகுதி கழக தேர்தலை செப்டம்­பர் 1, 2 ஆகிய 2 தேதிகளில் ஏதேனும் ஒரு தேதி மற்றும் இடத்தினை தலைமைக் கழக பிரதிநிதி அறிவித்து தேர்தல் நடத்திட நடவடிக்கை மேற்கொள்வர்.

இவ்வாறு தேர்தல் நடைபெறும் நாட்களில் பிரச்னைகள் ஏதுமின்றி சுமூகமாக தேர்தல் நடைபெற ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  சென்னை வடக்கு மாவட்ட தலைமை கழக பிரதிநிதி: ராசாஅருண்மொழி பெரம்பூர் வடக்கு, பெரம்பூர் தெற்கு, ராதாகிருஷ்ணன் நகர் கிழக்கு, ராதாகிருஷ்ணன் நகர் மேற்கு, ராயபுரம் கிழக்கு, ராயபுரம் மேற்கு. சென்னை வடகிழக்கு மாவட்ட தலைமை கழக பிரதிநிதி: எஸ்.ஆஸ்டின் திருவொற்றியூர் கிழக்கு, திருவொற்றியூர் மேற்கு, திருவொற்றியூர் மத்திய, மாதவரம் வடக்கு, மாதவரம் தெற்கு.  சென்னை கிழக்கு மாவட்ட தலைமை கழக பிரதிநிதி: பார்.இளங்கோவன் துறைமுகம் கிழக்கு, துறைமுகம் மேற்கு, எழும்பூர் வடக்கு, எழும்பூர் தெற்கு, கொளத்தூர் கிழக்கு, கொளத்தூர் மேற்கு, திரு.வி.க.நகர் வடக்கு, திரு.வி.க.நகர் தெற்கு, வில்லிவாக்கம் கிழக்கு, வில்லிவாக்கம் மேற்கு, அம்பத்தூர் வடக்கு, அம்பத்தூர் தெற்கு, அம்பத்தூர் கிழக்கு சென்னை மேற்கு மாவட்ட தலைமை கழக பிரதிநிதி:

திருவண்ணாமலை ரா.ஸ்ரீதரன் அண்ணாநகர் வடக்கு, அண்ணாநகர் தெற்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு கிழக்கு, ஆயிரம் விளக்கு மேற்கு.

சென்னை தென்மேற்கு மாவட்ட தலைமை கழக பிரதிநிதி: அன்னியூர் சிவா மயிலாப்பூர் கிழக்கு, மயிலாப்பூர் மேற்கு, தியாகராயர் நகர் கிழக்கு, தியாகராயர் நகர் மேற்கு. சென்னை தெற்கு மாவட்ட தலைமை கழக பிரதிநிதி: பெ.குழந்தைவேலு சைதாப்பேட்டை கிழக்கு, சைதாப்பேட்டை மேற்கு, கலைஞர்நகர் (விருகம்பாக்கம்) வடக்கு, கலைஞர்நகர் (விருகம்பாக்கம்) தெற்கு, வேளச்சேரி கிழக்கு, வேளச்சேரி மேற்கு, சோழிங்­கநல்லூர் கிழக்கு, சோழிங்கநல்லூர் மத்திய, சோழிங்கநல்லூர் மேற்கு, மதுரவாயல் வடக்கு, மதுரவாயல் தெற்கு.காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைமை கழக பிரதிநிதி: பெ.குழந்தைவேலு ஆலந்தூர் வடக்கு, ஆலந்தூர் தெற்கு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: