சென்னை: பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், ‘பொன்னியின் செல்வன்’. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், பிரபு, பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டு பாடல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் செப்டம்பர் 6ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. அதுபோல், செப்டம்பர் முதல் வாரத்தில் தெலுங்கு பதிப்புக்கான டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. படம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது.