கொசஸ்தலை ஆற்றில் ஆந்திர அரசு அணைகள் கட்டுவதை கைவிட வலியுறுத்தி ஆக.30ல் அறப்போராட்டம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: கொசஸ்தலை ஆற்றில் ஆந்திர அரசு அணைகள் கட்டுவதை கைவிட வலியுறுத்தி பாமக அறப்போராட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி அறப்போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டு உழவர்கள், பொதுமக்களின் நலனுக்கு எதிராக ஆந்திர அரசின் சட்டவிரோத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் ஒப்புதலை பெறாமல் அணைகளை கட்ட முடியாது; ஆந்திர அரசின் அத்துமீறலை அனுமதிக்க முடியாது என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு ஏற்கனவே ஓர் அணை காட்டியுள்ளது, தற்போது மேலும் 2 அணைகளை கட்ட திட்டமிட்டுள்ளது. இரு அணைகள் கட்டப்பட்டால் கொசஸ்தலை ஆற்றில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என ஆவேசமாக தெரிவித்தார். கொசஸ்தலை ஆற்றில் புதிய அணைகள் கட்டப்படுவதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: