ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கு: விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம்தானே என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசின் கொள்கை சார்ந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டுமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி 2019-ல் வழக்கு தொடர்ந்தார். பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். வேறு ஒரு தேதிக்கு விரிவான விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிடுவதாக கூறி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: