தொடர் விடுமுறை காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

பெரியகுளம் : கிருஷ்ண ஜெயந்தி காரணமாக உருவான தொடர்விடுமுறையால் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.பெரியகுளத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக நீர் வரத்து இருக்கும். இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த அருவிக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

அருவிக்கான நீர் ஆதார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை தென்மேற்கு பருவமழை பெய்தது. இதன் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு தொடர் அரசு விடுமுறை என்பதால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. பலரும் குடும்பத்தினருடன் வந்து அருவியில் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.

Related Stories: