ஆவடி ரயில்நிலையத்தில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்: ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை-மங்களூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் ஆவடியில் நின்று செல்லும் சேவையை ஒன்றிய அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் தினசரி இயங்கி வருகிறது. இந்த ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு நாளும் மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை மங்களூரை சென்றடையும். பின்னர் மங்களூரில் இருந்து அன்று மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சேரும்.

இந்த அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் 6 மாத சோதனை அடிப்படையில் ஆவடி ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதன் பிறகு, ஆவடி ரயில்நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் வசதி மேற்கொள்வதற்கான அறிக்கையை ஒன்றிய அரசிடம் வழங்கும் என தென்னக ரயில்வே அறிவித்தது.  இந்நிலையில், சென்னை-மங்களூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நேற்று காலை ஆவடி ரயில் நிலையத்தில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரன், இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து, ரயில் நிறுத்த சேவையை துவக்கி வைத்தனர்.

Related Stories: