பழவேற்காடு பஜாரில் டீக்கடையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது: 900 பாக்கெட் பறிமுதல்

பொன்னேரி: பழவேற்காடு பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக 7 முறை சிறைக்கு சென்றும், தனது டீக்கடையில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 900 பாக்கெட் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்பட பல்வேறு போதைபொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைபொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்து, சிறையில் அடைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பொன்னேரி அருகே பழவேற்காடு பஜார் பகுதியில், பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொன்ராஜ் (38) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனது டீக்கடையில் கஞ்சா பதுக்கி வைத்து, பள்ளி மாணவர்கள் மற்றும் மீனவர்களை போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி வந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கடந்த 5 ஆண்டுகளில் 7 முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.எனினும், டீக்கடையில் பதுக்கி வைத்து பொன்ராஜ் கஞ்சா பதுக்கி வைத்து தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாரிடம் புகார் எழுந்தது. இப்புகாரின்பேரில் நேற்று மாலை திருப்பாலைவனம் போலீசார் பொன்ராஜின் டீக்கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், அங்கு விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 900 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்ராஜை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: