சென்னை, கோவை, மதுரை பஸ்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் திட்டம்

சென்னை: சென்னை, கோவை, மதுரையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். இது குறித்து போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்: தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தில் சென்னை, கோவை, மதுரையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நவீனமயமான டிக்கெட் மெஷின்கள் நடத்துனர்களுக்கு

வழங்கப்படும். அப்போது பேருந்தில் பயணம் செய்யும் பயணி பணம் கொடுத்து டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக ‘என்சிஎம்சி’ கார்டை (ஒரு தேசம் ஒரு அட்டை) பயன்படுத்தி டிக்கெட்  பெற முடியும். இதேபோல் ரயில்நிலையங்களில் தானியங்கி மெஷினை பயன்படுத்தி டிக்கெட் பெறுவதை போல், போக்குவரத்துக்கழகத்திலும் தானியங்கி முறையில் டிக்கெட் பெறும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

Related Stories: