தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி 100% தடை: அமைச்சர் தகவல்

சென்னை; சென்னை ராமாபுரத்தில் நேற்று மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி  தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணி கூறியதாவது: திமுக ஆட்சி அமைத்த 15 மாதத்தில் அதைவிட நாங்கள்  அதிகமான வழக்கு பதிவு செய்து, கஞ்சா, போதை பொருட்களை பறிமுதல்  செய்திருக்கிறோம்.  தமிழகத்தில் கஞ்சா  உற்பத்தி 100% தடைசெய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவிக்கின்றனர்.  ஆனால், தமிழகத்திற்கு வரும் கஞ்சா குறித்து ஆய்வு செய்த போது, ஆந்திரா,  கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலிருந்து வருவது உறுதி செய்யப்பட்டது.  

அதிலும் ஆந்திராவில் இருந்தே அதிகம் தமிழகத்திற்கு கடத்திவருவதை  உறுதிசெய்து, ஆந்திராவிற்கு சென்று ஆய்வுசெய்தனர். அதனால் 6,500 ஏக்கரில்  கஞ்சா உற்பத்தி செய்யப்படுவதை கண்டறிந்து ஆந்திர அரசுக்கு தெரிவித்தோம்.  உடனடியாக அதனை ஆந்திர அரசு அழித்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி. இவ்வாறு அவர்  கூறினார்.

Related Stories: