75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்திநகர் நுழைவு பகுதி தூணில் தேசியக்கொடி ஓவியம்

நெல்லை:  நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை காந்திநகர் குடியிருப்பு நுழைவு பகுதி தூணில் தேசியக்கொடி மற்றும் மகாத்மா காந்தி ஓவியங்கள் வரையப்பட்டன. நெல்லை பழையபேட்டை ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி எதிரே காந்திநகர் குடியிருப்பு நுழைவு பகுதியில் காமராஜர் 1961ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்தபோது நிறுவிய தூண் உள்ளது. இந்த தூண் காந்திநகர் பகுதியில் குடியிருப்புகள் உருவாக ஆரம்பித்தபோது அதன் நினைவாக அப்போது காமராஜரால் நிறுவப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் பல்வேறு குடியிருப்புப் பகுதிகள் உருவாகியுள்ளது.

இந்நிலையில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்திநகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்க தலைவர் காசிராஜன், செயலாளர் சார்லஸ் முத்துராஜ், பொருளாளர் அறம்வளர்த்தநாதன் உள்ளிட்ட இப்பகுதி மக்கள் சார்பில் இந்த தூணில் வர்ணம்பூசி, தேசியக்கொடி மற்றும் காந்தியடிகள் ஓவியம் வரையும் பணி நடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக காந்திநகர் பகுதி நினைவு தூண்களில் வர்ணம்பூசி, தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் மற்றும் தேசியக்கொடி ஓவியங்களை வரைந்து முடித்த பிறகு அந்த தூணின் மேல் பகுதியில் தேசியக் கொடியை பறக்கவிட உள்ளோம் என்று தெரிவித்தனர்.

Related Stories: