சவால்களை கடந்து சாதனை படைக்கிறது; உலகத்துக்கே நம்பிக்கையாக திகழ்கிறது இந்தியா: சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி பெருமிதம்..!

டெல்லி; சவால்களை கடந்து இந்தியா சாதனை படைக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி பிரதமர் மோடி ஏற்றினார். பின்னர் உரையாற்றிய அவர்; உலக பிரச்சனைகளுக்கு எல்லாம் இன்று இந்தியா தீர்வு கண்டு வருகிறது. உலகத்துக்கே நம்பிக்கையாக திகழ்கிறது இந்தியா; சவால்களை கடந்து இந்தியா சாதனை படைக்கிறது. பன்முக தன்மை கொண்ட இந்தியர்கள் அனைவரும் தேசப் பற்றில் ஒன்றிணைவதால் இந்தியா அசைக்க முடியாத சக்தியாக உள்ளது.

வேகமாக வளர்ச்சியடைய ஒவ்வொரு இந்தியரும் அடியெடுத்து வைக்கும் காலம் இது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பலம். 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை நாம் கண்டிருக்கிறோம். 8 ஆண்டுகளுக்கு முன் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு கிடைத்தது: ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்பதை உறுதி செய்துள்ளோம். இந்தியா நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நாட்டு மக்களின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை. நமது நாட்டின் மொழிகளின் பெருமையை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

நமது ஒவ்வொரு மொழியும் போற்றப்பட வேண்டும் அதை குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். குழந்தைகள் கூட வெளிநாட்டு பொம்மைகளை வைத்து விளையாட மறுக்கின்றனர். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின்  அத்தியாயத்தில் மிகவும் முக்கியமானது ஆகும், எவ்வளவு காலத்திற்கு தான் நாம் பிறரையே நம்பி இருக்க முடியும் அனைத்து துறைகளிலும் சுயசார்பு நமக்கு தேவை. இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருந்து அடிமைத்தனம், அடக்குமுறை  அகற்றப்பட வேண்டும். அனைவரும் வாருங்கள் என்னுடன் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள், அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம்.

இந்தியாவின் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவரின் வளர்ச்சிக்கு இன்னொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். அனைவருக்கும் நல்லாட்சி அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் நாம் தற்பொழுது பயணத்து வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. 200 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. எனது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் இந்தியாவின் கடைசி குடிமகனுக்கும் அரசின் சலுகைகள் சென்று சேர்வது என்பதுதான்.

அது தான் மகாத்மா காந்தி உடைய கனவாக இருந்தது. நான் தான் சுதந்திரத்திற்கு பின்னர் பிறந்த இந்தியாவின் முதல் பிரதமர். ஆனால், சுதந்திரப் போராட்டத்தின் தியாகங்களின் வலிகளை நான் உணர்ந்துள்ளேன். மங்கள் பாண்டே, பகத்சிங் உள்ளிட்ட புரட்சியாளர்களுக்கு நாடு நன்றி செலுத்துகிறது. ஆங்கிலேயர்கள் வெளியேறினால் பொருளாதாரம் பின்னோக்கி சென்றுவிடும் என்று கூறினார்கள். உலக நாடுகளுக்கு தேவையான பொருட்களை நாம் உற்பத்தி செய்ய வேண்டும். மொபைல் போன் உற்பத்தியில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது.

எரிசக்தி துறையில் நாம் தற்சார்பு அடைய வேண்டும். குறைபாடு இல்லாத தரமான பொருட்களை நாம் உற்பத்தி செய்ய வேண்டும். மிகப்பெரிய கனவுகளை காணுங்கள், கனவுகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசு துரிதமாக பணியாற்ற வேண்டியது அவசியம். ஒவ்வொரு விஷயத்திற்கும் மேற்கு உலகை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய வரலாற்றில் அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியமானது. அடுத்த 25 ஆண்டுகளில் அடிமைத்தனத்திற்கான தடைகளை வெளியேற்ற வேண்டும். தீவிரவாதம், இயற்கை பேரிடர் உள்ளிட்ட முரண்பாடுகளை கடந்து இந்தியா முன்னேறி வருகிறது.

ஒட்டுமொத்த உலகமும் இன்று இந்தியாவை பார்க்கும் விதம் மாறி உள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றனர் பிரதமர். உங்களில் ஒருவனாக இருந்து நான் பெற்ற அனுபவங்களை உபயோகப்படுத்தி வருகிறேன். உலக பிரச்சினைகளுக்கு இன்று இந்தியா தீர்வு காண்கிறது. உங்களில் ஒருவனாக இருந்து நான் பெற்ற அனுபவங்களை உபயோகப்படுத்தி வருகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: