வடமாநில சிறுமி தூக்கிட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி: புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி ரெட்டி தெருவில் வசிப்பவர் சித்தன் பரேரா. தனியார் தொழிற்சாலை ஊழியர். இவரது மனைவி பவிதா பரேரா (45) இவர்களுக்கு 3 மகள்கள் ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மூன்றாவது மகள் காயத்ரி பரேரா (17), இவர், பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், காயத்ரி பரேரா நேற்று அதிக நேரம் செல்போன் பேசிக் கொண்டிருந்ததார். அதை தாய் பவிதா பரேரா, கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த காயத்ரி பரேரா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சிப்காட் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் வழக்கு பதிவுசெய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: