செங்கல்பட்டில் மருத்துவர் மகனுக்கு டெங்கு; மருத்துவமனையில் அனுமதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவரின் மகனுக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதை அடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரின் வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், திறந்த வெளியில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள், பழைய டயர்கள், தண்ணீர் தொட்டிகளில் நீர் தேங்குகின்றதா? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர் வசித்த வீட்டின் அருகே பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலரிடம் கேட்டபோது, பாதிக்கப்பட்ட நபர் தற்போது நலமுடன் உள்ளதாகவும், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுவை மக்களிடையே ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Related Stories: