செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியர் வரவேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு மாணவியர் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமை வகித்தார். வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் பொருளாளர் சுரேஷ் கன்காரியா, கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.ஷாலினி, கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் இரா.அருணாதேவி அகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில், தலைமை விருந்தினராக  செங்கல்பட்டு வருவாய் கோட்ட அலுவலர் சஜீவனா, தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் பிரவீன் குமார் டாட்டியா ஆகியோர் கலந்து கொண்டு புதிய மாணவர்களை வரவோற்று வாழ்த்தி பேசினர். முன்னதாக,  கல்லூரியின் தாளாளர்  விகாஸ் சுரானா  அனைவரையும் ரவேற்றார். கல்லூரியின் பொருளாளர் சுரேஷ் கன்காரியா அறிமுகம் செய்து கௌரவித்தார்.

மாணவர் பேரவை தலைவி மூன்றாமாண்டு வங்கி மேலாண்மையியல் துறையை சார்ந்த மாணவி த.கோ.அமிர்தாம்பிகை, மூன்றாமாண்டு வேதியியல்  துறையை சேர்ந்த மாணவி த.கவிதா, கல்லூரியின் சிறப்பம்சங்களையும் கல்லூரியில் உள்ள சிறப்புக்குழுக்களினால் ஏற்படும் நல்ல வாய்ப்புகளையும் அதனால் மாணவியர்கள் பெறும் நன்மைகளையும், முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர். தொடர்ந்து, பன்னிரெண்டாம் வகுப்பில் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கும் விளையாட்டு துறையில் மாநில, மாவட்ட, தேசிய, சர்வதேச அளவில் சாதித்த மாணவியர்களுக்கும், பள்ளியளவில் முதல் மூன்று இடங்களைப்  பிடித்த மாணவியருக்கும் என மொத்தம் 104 மாணவியருக்கு வித்யாசாகர் கல்விக்குழுமம் சார்பில் கல்வி கட்டண சலுகை வழங்கப்பட்டது.

Related Stories: