விஷம் கொடுத்து தாயை கொன்று மகன் தற்கொலை

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நடராஜ பிள்ளை தெரு ஜீயர் தோப்பை சேர்ந்தவர் கோமளவள்ளி(80). இவரது மகன் ரவிச்சந்திரன்(56). திருமணம் செய்து கொள்ளாத இவர், நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் உள்ள பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதித்த நிலையில் இருந்த தனது தாய் கோமளவள்ளியை பார்ப்பதற்காக ரவிச்சந்திரன் கடந்த 10 நாட்களுக்கு முன் மன்னார்குடியில் உள்ள வீட்டுக்கு வந்தார். ஒருபுறம் தனக்கும் திருமணமாகவில்லை, மறுபுறம் உடல்நிலை பாதித்த தாயை பார்த்து கொள்ள உறவினர்கள் யாரும் இல்லை என்ற ஏக்கத்தில் ரவிச்சந்திரன் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த குருணை மருந்தை தனது தாய்க்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார். சிறிது நேரத்தில் அடுத்தடுத்து, இருவரும் இறந்தனர். நேற்று காலை நீண்ட நேரமாக இவரது வீட்டில் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து மன்னார்குடி நகர காவல் நிலையத்துக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு  தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: