நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட முடியாது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பொதுநல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்தின் மாண்புகளை குறைக்க வேண்டாம்  எனவும், நீதிமன்றம் என்பது நீதியை மக்களுக்கு சரியாக கொண்டு சேர்க்க கூடிய என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, ஆலை அமைப்பது போன்ற பொதுநல வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நிர்வாக நீதிபதி பி.என். பிரகாஷ் மற்றும் நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள், நீதிமன்றம் என்பது நீதி பரிபாலனம் நடக்க கூடிய இடம். இங்கு வந்து சாலை அமைப்பது, கழிவறை கட்ட உத்தரவிடுவது போன்ற விசயங்களை எல்லாம் இங்கு பொதுநல வழக்காக பதிவிட வேண்டாம். அது நீதிமன்றத்தின் பணி இல்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் நீதிமன்றம் அரசின் நிர்வாக பணிகளில் முழுவதுமாக தலையிட முடியாது. இது போன்ற கோரிக்கைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் போன்ற மக்கள் பிரதிநிதிகளை அணுகுங்கள். மேலும் இதுபோன்ற பொதுநல வழக்குகள் என்ற பெயரில் நீதிமன்றத்தின் நேரத்தையும், மாண்பையும் கெடுத்துவிட வேண்டாம் என நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

Related Stories: