திருச்சியில் கொள்ளிடம் பழைய பாலத்தின் 17-வது தூண் இடிந்து விழுந்தது: கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

திருச்சி: திருச்சியில் கொள்ளிடம் படகு பாலத்தில் 17-வது தூண் இடிந்து விழுந்திருக்கிறது. திருச்சிமாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கொள்ளிடம் பாலம் கட்டபட்டது. 1928 ஆம் ஆண்டு இந்த பாலமானது ஆங்கிலேயர்களால் இரும்பு தூண்களை கொண்டு வந்து கட்டப்பட்டது.

இந்த பாலத்தில் ஆயுட்காலம் முடிவடைந்த நிலையில் அதன் அருகிலேயே சென்னை நேப்பியர் பாலம் போன்று வடிவமைப்பில் ஒரு புதிய பாலம் 2012 கட்ட ஆரம்பிக்கப்பட்டு 2015ல் கட்டி முடிக்கப்பட்டது.அந்த பாலம் தான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இரும்பு பாலம் 2018 ஆண்டு ஏற்பட்ட அதிக வெள்ளத்தின் காரணமாக அதில் இருக்கக்கூடிய 18 மற்றும் 19-வது தூண்கள் இடிந்து விழுந்தது.

அதன் காரணமாக அனைத்து விதமான போக்குவரத்துகளும்  முழுமையாக நிறுத்தப்பட்டது. கடந்த 6 நாட்களாக கொள்ளிடத்தில் 1 லட்சம் கன அடிக்கு அதிகமான தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளத்தின் காரணமாக 20-வது தூண் முழ்கும் நிலையில் இருந்தது. திடீரென பழைய பாலத்தில் 17-வது தூண் இடிந்து விழுந்தது.

இந்த பாலம் இடிய கூடிய நிலையில் இருப்பதால் வெள்ளத்திற்கு முன்பாகவே தமிழக அரசு இந்த பாலத்தினை முழுமையாக இடிக்க வேண்டும் என்பதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு வெள்ளம் வந்த நிலையில் தான பணிகளை நிறுத்தி வைக்கப்பட்ட நிலை ஏற்பட்டிருந்தது. பழைய பாலத்தை பொறுத்த  வரை எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories: