மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல் கண்டித்து மின் ஊழியர்கள் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: மின்சார சட்ட திருத்த மசோதா 2022ஐ மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் பணி முடக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார சட்ட திருத்த மசோதா 2022ஐ மக்களவையில் மத்திய அமைச்சர் ஆர்கே சிங் அறிமுகம் செய்துள்ளார். முன்னதாக இது தொடர்பாக தேசிய மின்சார  தொழிலாளர் பொறியாளர் கூட்டமைப்பு சார்பாக டெல்லியில் கடந்த 2ம் தேதி கூடி  விவாதிக்கப்பட்டது.

அப்போது ‘மின்சார சட்ட திருத்த மசோதா 2022யை  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் கண்டன  ஆர்ப்பாட்டங்களை நடத்துவது நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல்  செய்யப்படும் நாளில் நாடு முழுவதும் பணி முடக்கம் செய்வது என முடிவு  எடுக்கப்பட்டது. அதன்படி தமிழக மின்வாரிய தொழிற்சங்கத்தினர்  இப்போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தனர்.

மேலும் இதுதொடர்பான கடிதத்தையும் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி  வைத்தனர். பிறகு திட்டமிட்டபடி நேற்று காலை தமிழகம் முழுவதும் பல்வேறு  இடங்களில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் பணி முடக்கம் செய்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். அந்தவகையில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை  அலுவலகம் முன்பும் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் 85 ஆயிரம் ஊழியர்களும், நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மின் துறை ஊழியர்களும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: