பஞ்சு குடோனில் விளையாடிய சிறுவன் மூச்சுத்திணறி சாவு

திண்டுக்கல்: ராஜபாளையம் அருகே முத்தாநதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (38). இவரது மனைவி காளீஸ்வரி (31). இவர்களது மகள் தமிழ்ச்செல்வி (7), மகன் சுந்தர் (4). இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திண்டுக்கல் அருகே ரெட்டியப்பட்டியில் உள்ள தனியார் பஞ்சு மில்லில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்தனர்.நேற்று மாலை 4 மணி அளவில் சுந்தர், குடோனில் சேமித்து வைத்திருந்த பஞ்சில் விளையாடி கொண்டிருந்தான் அப்போது திடீரென மூச்சுத்திணறி மயங்கி விழுந்தான். உடனே அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சுந்தரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: