தொழில்நுட்ப மேம்பாட்டு பணிக்காக இஸ்ரேல் செல்லும் ராணுவ ரேடார்கள்

மதுக்கரை:  இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு பிரிவில் ஏராளமான பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நவீன தொழில்நுட்பங்களில் அடிக்கடி மேம்படுத்துதல் பணி செய்ய வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில்,  ராணுவத்தில் பாதுகாப்பு பணிகளுக்கும், எதிரிகளுடனான சண்டைக்கும் பயன்படுத்தப்படுகின்ற ரேடார் கருவிகள் அடங்கிய கட்டுப்பாட்டு அறைகளுக்கான உபகரணங்களை மேம்படுத்த ராணுவம் திட்டமிட்டது.

அதன்படி, 18 உயர்ரக கருவிகளை உள்ளடக்கிய கட்டுப்பாட்டு அறைகளில் நவீன தொழில் நுட்பத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டு அவற்றை இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்புகின்றனர். இதற்காக, 18 கட்டுப்பாட்டு அறைகள் கர்நாடகாவில் இருந்து  கோவை வழியாக நேற்று கேரளாவுக்கு கனரக லாரியில் கொண்டு செல்லப்பட்டன. அவை, கொச்சின் துறைமுகத்திலிருந்து கப்பல் வழியாக இஸ்ரேல் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்தி நவீன உபகரணங்களை பொருத்திய  பின்னர் இந்தியாவுக்கு வரவழைக்க உள்ளனர்.

Related Stories: