தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 1,057 பேர் பாதிப்பு; உயிரிழப்பு ஏதும் இல்லை : 1,429 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று 1,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 35,52,698. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 784534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35,04,776.

* தற்போது 77 அரசு ஆய்வகங்கள், 269 தனியார் ஆய்வகங்கள் என 346 ஆய்வகங்கள் உள்ளன.

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,889.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 6,83,50,568

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை: 29,542

* இதுவரை கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35,52,698

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,057

* இன்று சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 234

* தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 637 பேர். பெண்கள் 420 பேர். மூன்றாம் பாலினத்தவர் யாருமில்லை.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,429 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 35,04,776 பேர்.

Related Stories: