ஆலங்குடி நகர் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆலங்குடி : ஆலங்குடி நகர் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிக அளவிலான மாடுகள் சாலைகளில் சுற்றி தெரிந்து வருகின்றது. சாலைகளில் நடுவே திரியும் மாடுகளால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு பலர் காயமடைந்து வருகின்றனர். மேலும் பேருந்து நிறுத்தம் பகுதி நிற்கும் பொது மக்களையும் மாடுகள் முட்டுவதாலும் பொதுமக்கள் அச்சத்துடனே பேருந்துக்காக காத்திருக்கும் சூழலும் நிலவி வருகின்றது.

ஆலங்குடி நகர் பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் அதிக அளவில் மாடுகள் சுட்டித் திரிந்து வருகின்றனர். இது மட்டும் இன்றி சாலை நடுவே மாடுகள் படுத்து கிடப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.இது குறித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் அடுத்தடுத்து புகார்கள் அளித்த நிலையில், சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் மீறி சாலையில் திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் சிறைபிடித்து பேரூராட்சி அலுவலகத்தில் அடைத்து வைத்தனர்.

இந்நிலையில் மீண்டும் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை சாலை பகுதிக்கு அவிழ்த்து நிறுத்தி விடப்பட்டதால் மீண்டும் மாடுகள் சாலைகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

தொடர்ந்து சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பேரூராட்சி நிர்வாகம் எடுப்பதோடு மட்டும் அல்லாமல் மாட்டின் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிப்பதுடன் மாடுகளை ஏலம் விடகோரியும் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: