என்எல்சி திட்டங்களுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு பயிற்சி பட்டதாரி பொறியாளர் தேர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள என்எல்சி திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி பட்டதாரி பொறியாளர் தேர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

2022 மே 5ம் தேதி, நான் ஏற்கனவே எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டதை மீண்டும் வலியுறுத்துகிறேன். 300 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், என்எல்சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையிலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது நியாயமானது அல்ல என்று கருதப்படுகிறது.

என்எல்சியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டை அடிப்படையாக கொண்டிருப்பதால், பெரும்பாலான தொழிலாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் தமிழகத்தில் உள்ளனர். நிர்வாக பணியாளர்களின் கணிசமான விகிதமும் அதே பகுதியில் இருந்து எடுக்கப்பட்டால் அது பொருத்தமானதாக இருக்கும். தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி பட்டதாரி பொறியாளர் பணிக்கு தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமான முடிவு எடுக்க வேண்டும்.

Related Stories: