சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் கால்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு; அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கத்தில்  நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: 44- வது செஸ் ஒலிம்பியாட் -2022 போட்டி போட்டியின் ஓய்வு நாளான நேற்று வீரர் - வீராங்கனைகளை உற்சாகப்படுத்துகின்ற வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,  அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மற்றும் சென்னையின்  புட்பால் கிளப் இணைந்து நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியினை சென்னை நேரு விளையாட்டு அரங்க மைதானத்தில் நடத்தின. 60க்கும் மேற்பட்ட வீரர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற லீக் போட்டியில் ஆப்ரோ அமெரிக்கா அணி முதலிடம், பிடே அணி  இரண்டாமிடம்,  யூரோப் அணி மூன்றாமிடம், இந்திய அணி நான்காமிடம் பெற்றன.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மை செயல் இயக்குநர், உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அலுவலர்கள்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் அரவிந்தன், பிடே தலைவர் ஆர்க்டே துவர்கோவிச், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத்தலைவர்  அசோக் சிகாமணி ஆகியோர் விளையாடினர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: