ஊரப்பாக்கத்தில் வீட்டை உடைத்து மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த 19 சவரன் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலை

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, வைர மோதிரம் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளைடியடித்து சென்றனர். வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் குலசேகரன் அவன்யு, பவித்ரா ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில்  சோபியா (29). அவரது, தாயார் நிர்மலா ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இதில், சோபியா சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் அலுவல

கத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் சோபியாவின் தாயார் நிர்மலா தனது மகளின் திருமண ஏற்பாட்டிற்காக  திருவாரூக்கு சென்றுள்ளார்.  இதனால், சோபியா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முடிச்சூரில் உள்ள அவருடைய உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு, தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில்,  நேற்று முன்தினம் மாலை சோபியா தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் அவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். உங்கள் வீட்டின் கதவு திறந்திருப்பதாக தகவல் கொடுத்தனர். உடனே சோபியா பதறிபோய் வீட்டிற்கு வந்து  பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.  வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 19 சவரன் நகைகள், ஒரு லட்சம் மதிப்பிலான 2 வைர மோதிரங்கள் மற்றும் ரூ. 25,000 கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து,  கூடுவாஞ்சேரி  இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து  கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில்  கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த 19 சவரன் நகை, 2 வைர மோதிரம் மற்றும் ரூ. 25,000 கொள்ளைடித்து சென்றது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: