விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்க 185 டிராக்டர்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்க, ரூ.22.89 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 185 டிராக்டர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்தில், விவசாயிகள் உழவுப் பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ரூ.22.89 கோடி மதிப்பீட்டில் 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள், 185 கொத்து கலப்பைகள் மற்றும் சேற்று உழவிற்கு 120 கேஜ் வீல்கள் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்க வேளாண்மைப் பொறியியல் துறையால் ரூ.22 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் அடையாளமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, ரோட்டவேட்டர்கள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் மற்றும் கொத்துகலப்பைகள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர்  இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி,  வேளாண்மை பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முருகேசன் மற்றும்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: