எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மக்களவை கூடியதும் அமலாக்கத்துறை நடவடிக்கை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முயன்றனர். தொடர்ந்து டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு வழக்கில் யங் இந்தியா நிறுவனத்திற்கு சீல் வைத்தது குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை வைத்தார். அதை ஏற்க அவைத் தலைவர் மறுத்ததால், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்துவதாக கூறியும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மைய பகுதியில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை தங்கள் இருக்கைக்கு செல்ல அறிவுறுத்தினார். ஆனால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் ஓம்பிர்லா மக்களவையை நண்பகல் 2 மணி வரை ஒத்தி வைத்தார். தொடந்து மீண்டும் கூடிய நிலையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் ஒரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: