சுகாதார கட்டமைப்பில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாமிடம்: ஒன்றிய சுகாதார துறை ஆணைய தலைவர் பேச்சு

சென்னை: இந்திய பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் என்ற இரு திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடு மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த தென் மாநிலங்களுக்கிடையேயான ஆய்வுக்கூட்டம் சென்னை அருகே கோவளத்தில் நேற்று  நடைபெற்றது. இதில், இந்திய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை செயலாளர்கள் கலந்துக் கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில்  தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் இந்திய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு கிராமங்கள் வரை உள்ளதால் அரசின் திட்டங்கள் கடைக்கோடி நபரையும் சென்றடைகிறது. சுகாதாரக் கட்டமைப்பில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாமிடம் வகிக்கிறது. இது பெருமைக்குரிய விஷயமாகும் என்றார்.

Related Stories: