சிபிஎஸ்இ 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆக.23ம் தேதி துணை தேர்வு

சென்னை: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிருக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும்  12ம் வகுப்புகளில் படித்த மாணவ மாணவியர்களுக்கான தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டன. இந்த இரண்டு  வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளும் கடந்த மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி வீதம் 92.71 சதவீதம். பத்தாம் வகுப்பின் தேர்ச்சி விகிதம் 94.40 சதவீதம். மேற்கண்ட இரண்டு தேர்வுகளிலும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவியர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஜூலை 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இந்த தேர்வு இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். இந்நிலையில், மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் உள்ள மாணவ மாணவியர் காலதாமத கட்டணம் ரூ.2000 செலுத்தி ஆகஸ்ட் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Related Stories: