கோர்ட் உத்தரவை 4 ஆண்டாக அமல்படுத்தாத கலசப்பாக்கம் தாலுகா மாஜி தாசில்தார் குற்றவாளி: தண்டனை நாளை அறிவிப்பு; ஐகோர்ட் அதிரடி

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா,  கடலாடி கிராமத்தில் பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி முருகன் என்பவர் 2017ல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 12 வாரங்களில் இதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி 2017 டிசம்பரில் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதை அமல்படுத்தவில்லை என்று முருகன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 2018  முதல் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்த போது, 4 வாரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தலைமை நீதிபதி முனீஸ்வர் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,கோர்ட் உத்தரவை 4 ஆண்டுகளாக அமல்படுத்தாத கலசப்பாக்கம் தாலுகா அப்போதைய (2017) பெண் தாசில்தார் குற்றவாளி என்று அறிவிக்கிறோம். தண்டனை விபரத்தை நாளை (5ம் தேதி) அறிவிப்போம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: