அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் பன்னீர்செல்வம் தரப்பு முறையீடு

சென்னை:  அதிமுக பொதுக்குழு வலக்கை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் பன்னீர்செல்வம் தரப்பு முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், பொதுக்குழு வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை என உயர்நீதிமன்ற நீதிபதி விளக்கம் கொடுத்துள்ளார். வழக்கை மாற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிபதியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கூறி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கிருஷ்ணராமசாமி உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்பதால் சட்டப்படி பொதுக்குழுவை நடத்தி கொள்ளலாம் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

இதனை அடுத்து ஜூலை 11-ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு நடத்தப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக மீண்டும் சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை நாளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிப்பதாக அறிவித்திருந்தார். இதனை எதிர்த்தது இன்று காலை அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து நீதித்துறையிடம் மனு அளித்திருந்தார். அந்த மனுவில் பொதுக்குழு வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது, வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றவேண்டும் என எழுத்து பூர்வமாக நீதித்துறையின் பதிவுத்துறைக்கு  மனு ஒன்றை அளித்திருந்தார்.

இதனை தொடந்து, நேரடியாக ஓபிஎஸ் சார்பில் இன்றைக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாதர் பண்டாரி, நீதிபதி பரத் சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வு முன்பு வழக்கறிஞர் எம்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி இந்த வழக்கை தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என்றும், வேறுஒரு நீதிபதிக்கு மாற்றவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி இதுபோன்று வழக்கை ஒரு நீதிபதியிடமிருந்தும், மற்றொரு நீதிபதியிடம் மாற்றமுடியாது, இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட ஆலோசித்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: