நெமிலி : நெமிலி அடுத்த வேட்டங்குளம் பகுதியில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டித்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த வேட்டாங்குளம் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்தின் மேல்தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து பழுதடைந்தது. ஆபத்தான நிலையில் உள்ள இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.