அறப்போர் இயக்கத்துக்கு எதிரான வழக்கு; எடப்பாடிக்கு எதிராக செய்திகளை வெளியிட தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நெடுஞ்சாலை துறையில் நடந்த 692 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் வெளியிட அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழகத்தில் 2019 முதல் 2021ம் ஆண்டுகளுக்கு இடையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில், நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போட்டதன் மூலம் ரூ. 692 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சமுக ஊடகங்களில் அறப்போர் இயக்கம் தரப்பில் ஆதாரங்கள் வெளியிடப்பட்டன.

அதேபோல அறப்போர் இயக்கத்தின் இணையதளத்திலும் இந்த புகார் வெளியிடப்பட்டது.  இதையடுத்து, தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வெளியிட அறப்போர் இயக்கத்துக்கு தடை  விதிக்க கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே இந்த குற்றச்சாட்டுக்கள் பொதுவெளிக்கு வந்து விட்டது. எனவே, அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது விசாரணையை 11ம் ேததிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: