வீராணம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை

சுரண்டை: வீராணம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட பிரசவம் நடைபெறுகிறது.

தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருவதால் போதுமான மருந்து, மாத்திரைகள் இல்லை. இஸ்லாமியர் ஒருவரால் மருத்துவமனை அமைப்பதற்காக கொடுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் இடம் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது. எனவேல வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. சந்திப்பின் போது, ஒன்றிய கவுன்சிலர் வீராணம்  சேக் முகம்மது, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, கரையாளனுர்  சன்முகவேலு, வீராணம் கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உடன் இருந்தனர்.

Related Stories: