திருத்தணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சென்னை: திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த கோயிலுக்கு தினமும் தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று ஆடி மாதம் மற்றும் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒட்டி நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மலைப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். அதிக வாகனங்கள் மலைப்பாதையில் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மலைக்கோயில் மாடவீதியிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசார் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமத்துக்குள்ளாகி தவித்தனர்

தற்போது பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவதால் பலர் சொந்த கார் வாடகை வாகனங்களில் கோயிலுக்கு வருகின்றனர். நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து வருவதால் திருத்தணி அரக்கோணம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக தமிழக அரசும் மாநில நெடுஞ்சாலைத்துறை திருத்தணி முருகன் கோயில் நகராட்சியும் ரயில்வே நிர்வாகமும் இணைந்து ஒரு மெகா திட்டத்தை செயல்படுத்தினால் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் எளிதாக செல்லலாம் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘திருத்தணி மலைக் கோயிலுக்கு சென்று வர ஒரு பாதை மட்டுமே உள்ளது. மேலும் மலையிலிருந்து கீழே இறங்குவதற்காக ஒரு பாதை ஏற்பாடு செய்வதற்காக திட்டம் தயார் செய்யப்பட்டு அது திட்டம் கிடப்பில் இருந்து வருகிறது. அந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி இந்த இறங்கி வரும் சாலையும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரக்கோணம் சாலையில் இணைக்கவும் புதிய புறவழிச்சாலை உடன் ஒன்றிய அலுவலகம் வழியாக ஒரு மெகா மேம்பாலம் கட்ட வேண்டும். அதேபோல் அரக்கோணம் சாலையில் மலைக்கோயிலுக்கு வாகனங்கள் எளிதாக உள்ளே மலை ஏறுவதற்காக அந்தப் பகுதியிலும் ஒரு உயர்மட்ட பாலத்தை கட்ட வேண்டும். அப்போதுதான் தங்குதடையின்றி பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வந்து எளிதாக தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டும் முடியும்.

தற்போது போக்குவரத்து காரணமாக கோயிலுக்கு சென்று பல மணிநேரம் காத்திருப்பதை விட தரிசனம் செய்ய செல்வதற்காக சாலையிலே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தள்ளப்பட்டுள்ளது. எனவே இப்போது அந்த திட்டத்தை சம்பந்தப்பட்ட துறையினர் இணைந்து ஒரு திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆங்கில புத்தாண்டு விழாக்களில் ஜோதி நகர் ஏரி பகுதியில் அனைத்து வாகனங்களையும் பார்க்கிங் செய்ய வசதி ஏற்படும்,’’ என்றனர்.

Related Stories: