உயர் கல்வி நிறுவனங்களில் பூஸ்டர் தடுப்பூசி: யுஜிசி செயலர் அறிவுறுத்தல்

சென்னை: உயர் கல்வி நிறுவனங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கு யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 18 வயதுக்கு மேற்பட்ட தகுதி உள்ள அனைவருக்கும் ஜூலை 15ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடுகளை அந்தந்த பல்கலைக்கழக நிர்வாகங்களும், கல்லூரி நிர்வாகங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தவகையில் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத, தங்களது அனைத்து அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஊக்குவிப்பதோடு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: