மாணவர்களுக்கு தைரியம் ஏற்படுத்தும் கல்வி முறை தேவை: புதுவை ஆளுநர் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கல்வி வளர்ச்சி சங்கம், ஒன்றிய அரசின் கல்வி மற்றும் பயிற்சிக்கான தர நிர்ணய அமைப்பு ஆகியவை இணைந்து சென்னையில் கல்வி மாநாட்டினை நடத்தியது. இதில், புதுவை ஆளுநர் தமிழிசை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய தமிழிசை, ‘‘மதிப்பெண்களை வலியுறுத்துவதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.அனைவருக்கும் சரி சமமான கல்வி, தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஆனால் மாணவர்களுக்கு புரிதல் இல்லாத கல்வியை கொடுக்கிறோம். மாணவர்கள் தற்போது தற்கொலை செய்து கொள்வது கவலை அளிப்பதாக உள்ளது.

மாணவர்களிடம் சூழலை எதிர்கொள்ளும் நம்பிக்கை, தைரியம் ஏற்படுத்தும் வகையில் கல்வி முறை அமைய வேண்டும். புதிய கல்வி கொள்கையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முக்கியம் மாணவர்களை உளவியல் ரீதியாக அணுக பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

Related Stories: