மலைப்பகுதிகளில் தொடர் மழை; ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் கிடுகிடு உயர்வு

சின்னாளபட்டி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழையால், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆடலூர், பன்றிமலை, பெரும்பாறை, மஞ்சல்பரப்பு, புல்லாவெளி, தாண்டிகுடி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் பெய்யும் மழைநீர் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வரும்படி இயற்கையாகவே நீர்வரத்து வாய்க்கால்கள் அமைந்துள்ளது. மொத்தம் 24 அடி கொள்ளளவுள்ள நீர்த்தேக்கத்திலிருந்து திண்டுக்கல் மாநராட்சி மற்றும் திண்டுக்கலுக்கு தண்ணீர் செல்லும் வழி கிராமங்களாக ஆத்தூர், வக்கம்பட்டி, பித்தளைப்பட்டி, பிள்ளையார்நத்தம் மற்றும் சின்னாளபட்டி பேரூராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நேற்றைய நீர்மட்டம் 17 அடி. இப்பகுதிகளில் மழை தொடர்ந்தால், அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘திண்டுக்கல் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதுபோல தொடர்ந்து தண்ணீர் வந்தால் 3 அல்லது 4 நாட்களில் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது, என்றார்.

Related Stories: