நிதியுதவி கேட்கவில்லை, முதல்வரின் திட்டத்துக்கு ஆதரவு கேட்டேன்: பொன்முடி பேட்டி

விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று நடந்த வனத்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அளித்த பேட்டி:  தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு முதல்வர் எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்கு வேண்டும் என்று, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அவர்கள் புதிய கல்வி கொள்கை என்கிறார்கள். கல்வியை மேம்படுத்த  முதல்வர் குழு அமைத்து, செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றுதான் கேட்டேன். தர எண்ணிக்கையை பற்றி அண்ணாமலை கேட்டிருக்கிறார்.

தரத்தை உயர்த்த நான் முதல்வன் திட்டத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார். புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். அந்த காலத்தில் கிராமத்தில் படித்தவர்கள் எத்தனை பேர்? என அண்ணாமலை சொல்வாரா?. ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் படிப்பதை மாற்றி அனைவரும் படிக்க வைத்தது திராவிடம். பிரதமரிடம் நிதிஉதவி கொடுங்கள் என்று கேட்கவில்லை. முதல்வர் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தேன். பிரதமர் கூட எதுவும் சொல்லவில்லை. அவரே ஏற்றுக்கொண்டார். அண்ணாமலை நாங்கள் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து சமுதாயத்தினருக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக கல்வி வளர்ச்சி அளிக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் தான் திமுக. 53 சதவீதம் பேர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் உயர்கல்வி பயில்கிறார்கள். இவைகள் எல்லாம் திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகுதான், அண்ணா முதலமைச்சராகிய பிறகு தான் இவைகள் எல்லாம் நடந்துள்ளது. அதைத்தான் எடுத்துச் சொன்னேனே தவிர, யாரையும் குறை சொல்லவில்லை. செய்கிற காரியங்களுக்கு உங்களுடைய ஆதரவை கொடுங்கள் என்று  கேட்டேன். ஆனால், அண்ணாமலை இந்தளவிற்கு கொச்சைப்படுத்துவார் என நினைக்கவில்லை. முருகன் மாதிரி அவரும் வர முடியாதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: