அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில் புதிய கட்டுப்பாட்டு அறை: டிஜிபி திறந்து வைத்தார்

சென்னை: ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்துவதற்காக அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில் புதிய கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு திறந்து வைத்தார். உடன் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரு மற்றும் இணை ஆணையர் துணை ஆணையர் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணை ஆணையர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு மரக்கன்று வைத்தார். பின்னர் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் ஆவடி கட்டுப்பாட்டறைகளை ஆய்வு செய்து சிறப்பாக செயல்பட வேண்டும் என கூறினார்.

தமிழகத்தில் முதல் முறையாக ஆவடி கட்டுப்பட்டாரையில் வான்வழி காட்சிகளை நேரலையில் பார்க்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர எண் நூறுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் ஐந்து நிமிடங்களுக்குள் ரோந்து வாகனம் சம்பவ இடத்திற்கு செல்லும் வகையில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. ரோந்து வாகனங்கள் மற்றும் போக்குவரத்து துறை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு செல்கிறதா என பார்ப்பதற்கு ஜிபிஎஸ் ட்ராக்கிங் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்க்கும் வசதிகளும் உள்ளது. ஆவடி கட்டுப்பாட்டு அறை தொடர்பு கொள்ள சட்ட ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு தனி தொலைபேசி எண்ணும் போக்குவரத்து துறை மற்றும் ஹைவே பகுதிகளுக்கான புதிய தொலைபேசி எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: