விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

சென்னை:  விநாயகா மிஷன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. துறையின் டீன் செந்தில்குமார் வரவேற்று முகாமினை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் புதுமை கண்டுபிடிப்பு மையத்தின் இயக்குநர் டாக்டர் நாகப்பன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

முகாமில் சேலத்தை சேர்ந்த மலர் மருத்துவமனை, சுகம் மருத்துவமனை, அரவிந்த் ஸ்கேன் சென்டர், டைட்டன் ஐ பிளஸ், யுனிவர்சல் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிறுவனங்களும், ஈரோடு, ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளை சேர்ந்த மருத்துவ நிறுவனங்கள் என சுமார் 15 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என சுமார் 150 பேர் பங்கேற்றனர். வளாகத் தேர்வில் 75 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் நோக்கத்தோடு, 2 மருத்துவமனைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, துறையின் வேலைவாய்ப்பு மைய அதிகாரி தமிழ்சுடர், பயிற்சியாளர் டாக்டர் தீபிகா மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.   

Related Stories: