தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உதவ வேண்டும்: பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை: ‘பட்டம் பெற்று வெளியில் செல்லவிருக்கும் மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல் வேலை கொடுப்பவர்களாகவும் மாற வேண்டும்’ என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார். அண்ணா பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ெபான்முடி பேசியதாவது: இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுகின்ற மாணவர்கள் எதிர்கால வாழ்க்கையில் வளம் பல பெற்று நலமோடு வாழ முதல்வர் தன்னுடைய பிறந்தநாளில் அறிவித்த நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பல்வேறு சாதனைகளை உயர்கல்வித்துறையில் செய்திருக்கிறார்.

பட்டம் பெறும் நீங்கள் வேலைவாய்ப்பை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல் வேலை தருகின்ற நிறுவன அதிபர்களாகவும் ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறார். எப்படி மருத்துவம் படித்த மாணவர்கள் அரசு வேலையை மட்டும் சார்ந்திராமல் தனியார் மருத்துவமனைகளையும் உருவாக்கி பலருக்கு வேலைவாய்ப்பை கொடுக்கிறார்களோ, அதுபோல் பொறியியல் பட்டம் பெறுகின்ற நீங்கள் உங்கள் தகுதி திறமைக்கு ஏற்ப சிறு, சிறு தொழில்களை உருவாக்கி தொழில் முனைவர்களாக வரவேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கம்.

இதையெல்லாம் மனதில் கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும். பட்டம் பெற்று வெளியில் செல்லவிருக்கிற நீங்கள் வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல் வேலை கொடுப்பவர்களாகவும் மாற வேண்டும் என்று உங்களை நான் அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கின்றேன். இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடம். 53 சதவீதம் பேர் உயர்கல்வி பெறுகின்றனர். அதிலும் தற்காலங்களில் ஆண்களை விட பெண்களே அதிகம் பயிலுகின்றனர். இந்த ஆண்டிலே கூட இந்த பல்கலைக்கழகத்திலே பதக்கம் பெறுபவர்களில் பெண்களே அதிகம்.

56.5 சதவீதம் பேர் பெண்கள் பரிசுகளை பெறுகின்றனர். கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கலைஞர் நுழைவுத்தேர்வை ரத்து செய்தார். அதற்கு முன்னால் 25,000 ஆக இருந்த கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை 77 ஆயிரமாக உயர்ந்ததது. தற்போது அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7 சதவீதம் உள் ஒதுக்கீட்டையும் முதல்வர் வழங்கியிருக்கிறார்.

இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான விடுதிக்கட்டணம், கல்விக்கட்டணம், பேருந்து கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார். இவைகளையெல்லாம் கருத்தில் ெகாண்டு பிரதமரை பணிவோடு வேண்டிக்கொள்கிறேன், தமிழகத்தினுடைய கல்வி வளர்ச்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.   இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

Related Stories: