கொந்தகை அகழாய்வு தளத்தில் எலும்புகளை சேகரிக்க முதுமக்கள் தாழி திறப்பு

திருப்புவனம்: கொந்தகை அகழாய்வு தளத்தில் முதுமக்கள் தாழியில் உள்ள எலும்புகள், மண்டை ஓடுகளை எடுக்கும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடி அருகே கொந்தகை அகழாய்வு தளத்தில் 4 குழிகளில் 54 முதுமக்கள் தாழிகள் கடந்த 3 மாதங்களில் கண்டறியப்பட்டன. தாழிகளில் உள்ள எலும்புகள், மண்டை ஓடுகள் உள்ளிட்ட பொருட்களை திறந்து ஆய்வு செய்ய தொல்லியல் துறை திட்டமிட்டது.

கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பணிகள் நடக்கவில்லை. நேற்று மழை இல்லாததால் தாழிகளை சுற்றி உள்ள மண்ணை அகற்றும் பணி தொடங்கியது. மண்ணை அகற்றும்போது முதுமக்கள் தாழிகளின் அருகே தாழிகள் சாயாமல் இருப்பதற்காக வைக்கப்படும் சுடுமண் பிரிமனை (சுடுமண் வளையங்கள்) இரண்டு கண்டெடுக்கப்பட்டன. சிறியதும், பெரியதுமான இந்த கருப்பு நிற சுடுமண் பிரிமனை ஏற்கனவே கிடைத்தது போலவே உள்ளன.

மேலும் தாழிகளின் அருகே பானை ஓடுகள், எலும்புகள் கிடைத்தன. இதையடுத்து முதுமக்கள் தாழியின் உள்ளே உள்ள பொருட்களை வெளியே எடுக்கும் பணி  தொடங்கியது. ன்னதாக, 7ம் கட்ட அகழாய்விலும் முதுமக்கள் தாழிகளில் உள்ள எலும்புகள், பொருட்கள் எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: