வண்டலூர் பூங்காவில் கழுதைப்புலி உயிரிழப்பு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கழுதைப்புலி வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்பு செயலிழப்பின் காரணமாக உயிரிழந்தது. இதுகுறித்து, வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 19 வயதான ‘வெங்கட்’ என்ற ஆண் வரி கழுதைப்புலி கடந்த இரண்டு மாத காலமாக பல்வேறு உடல்நல கோளாறுகளால் சிகிச்சை பெற்று வந்தது. பூங்கா கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்பு செயலிழப்பின் காரணமாக நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து உயிரிழந்த வரி கழுதைப்புலியை பூங்கா மருத்துவமனையில் வைத்து டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், அதன் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

* இன்று விடுமுறை

மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 28ம் தேதி  (இன்று) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பூங்காவுக்கு இன்று விடுமுறை. இதற்கு பதிலாக வருகிற 2ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பார்வையாளர்களுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டிருக்கும் என பூங்கா நிர்வாகம் மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Related Stories: